கதாநாயகி, வில்லி, குணச்சித்ரம் என பல பாத்திரங்களை ஏற்று நடிப்பவர் நடிகை வரலட்சுமி.
இவர் தற்போது கதையின் நாயகியாக, வெல்வட் நகரம், காட்டரி, சேஸிங், கன்னித்தீவு போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் சேஸிங் படத்தில் சண்டைக் காட்சிகளில் எல்லாம் நடித்திருக்கிறார். சமீபத்தில் படத்தின் ஸ்டன்ட் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து இருந்தார் வரலட்சுமி.
இந்த நிலையில் சுந்தர் பாலு இயக்கத்தில் அவர் நடித்துள்ள கன்னித்தீவு படத்தின் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்.
வரலட்சுமியுடன் ஆஷ்னா சாவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா போன்ற நடிகைகளும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.
தண்ணீருக்குள் நான்கு கதாநாயகிகளும் இருக்க, முதலை ஒன்று இவர்களை கடிக்க வருவது போன்று இந்த போஸ்டர் உள்ளது.
0 comments:
Post a Comment