காரைநகர் பகுதியில் 2018 ம் ஆண்டிற்கான சிறந்த பண்ணையாளர்களாக தெரிவு செய்யப்பட்ட பண்ணையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
வடமாகாண விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு
காரைநகர் கால்நடை வைத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
இதில் 08 சிறந்த பண்ணையாளர்களுக்கான சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது. சிறந்த பண்ணையாளர்களுக்கான சான்றிதழை காரைநகர் கால்நடை வைத்தியர் குமார வழங்கி கெளரவித்தார்.
0 comments:
Post a Comment