நாங்க சுத்தம்- இப்படிச் சொல்கிறார் டிரம்ப்

உலகிலேயே தூய்மை பேணுவதில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது  பிற நாடுகள் மாசு பரவுவதை முறையாகக் கண்டு கொள்வதில்லை இவ்வாறு தெரிவித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ரொணால்ட் டிரம்ப்.  

அமெரிக்கா, பிரிட்டன் இடையிலான உறவை வலுப்படுத்தும் பொருட்டு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 3 நாள் பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். அங்கு அவர் பிரிட்டிஷ் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்ததாவது,

நாட்டில் பொருளாதாரம் என்பதை விட சுற்றுச்சூழல், பருவகால மாற்றம் குறித்து பல நாடுகள் கவலைப்படுவதில்லை. குறிப்பாக இந்தியா, சீனா, ரஷ்யா இதன் விழிப்பு இல்லை. 

மேற்கூறிய 3 நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தூய்மையான காற்று, தூய்மையான தண்ணீர் இல்லை. மாசு, தூய்மை குறித்து விழிப்பு இல்லை. பல நாடுகளுக்கு நீங்கள் சென்றால் அங்கு ( நாட்டின் பெயர்களை கூற மாட்டேன் ) முழு அளவில் சுவாசிக்க இயலாது. இந்த விடயத்தில் பொறுப்பில்லாத நாடுகளாக உள்ளது.

அமெரிக்கா மிகத் தூய்மையான நாடாகத் திகழ்கிறது. இதற்கு சான்றாக பல புள்ளிவிவரங்கள் உள்ளன-என்றார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment