உலகக்கோப்பை கிரிக்கெட்டின் 22-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை ஏதிர்கொண்டது. அந்த போட்டியின்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், தான் வீசிய 3-வது ஓவரின்போது கால் தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக ஆட்டத்தின் பாதியில் வெளியேறினார். இதன் பின்னர் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு ஏதிராக போட்டியிலும் புவனேஷ்வர் குமார் பங்கேற்காமல் அவருக்கு பதிலாக முகமது ஷமி களமிறக்கப்பட்டார். அந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஷமி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்நிலையில் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த புவனேஷ்வர் குமார் தற்போது காயத்திலிருந்து குணமாகி மீண்டும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். காயத்திலிருந்து குணம் அடைந்த போதிலும் அடுத்து நடைபெற உள்ள வெஸ்ட் இண்டடீஸ்-க்கு ஏதிரான 34-வது லீக் ஆட்டத்தில் பங்கேற்கமாட்டார் என இந்திய அணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் இங்கிலாந்து, வங்காள தேச அணிகளுடனான போட்டிகள் அடுத்தடுத்து வர உள்ள நிலையில் வேகப்பந்து புவனேஷ்வர் குமார் காயத்திலிருந்து குணமாகியுள்ளது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தினை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா-வெஸ்ட் இண்டிஸ் அணிகள் மோதும் 34-வது லீக் ஆட்டம் வரும் வியாழக்கிழமை (ஜூன் 27) மதியம் 3 மணிக்கு மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற உள்ளது.ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டும் 9 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment