இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை இல்லாமல் செய்வதற்கு இஸ்ரவேலின் யமாம் பயங்கரவாத ஒழிப்பு பொலிஸாரின் மூலம் உதவி வழங்க அந்நாடு முன்வந்துள்ளது.
இஸ்ரவேலில் தொழில்பார்க்கும் இலங்கையர்கள், அந்நாட்டிலுள்ள அதிகாரிகளிடம் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து தகவல் வழங்கியுள்ளதாகவும் இதனையடுத்தே இவ்வாறு தனது பொலிஸ் பிரிவின் மூலம் உதவி வழங்க இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இன்றைய சகோதர தேசிய நாளிதழொன்று அறிவித்துள்ளது.
உலகிலுள்ள பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் இஸ்ரேலின் யமாம் பொலிஸாருக்கு மாத்திரமே பயப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த யமாம் பொலிஸார் எந்த இடத்திலிருந்து செயற்படுகின்றார்கள் என்பதை இஸ்ரேல் மக்களே அறியாதுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலினால் இலங்கை இராணுவத்துக்கு பயிற்சியொன்றும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment