கடந்த தேர்தலின் போது விருப்பமில்லாத இருவருக்கு செய்து வைத்த பலவந்த திருமணமே இந்த அரசாங்கம் எனவும், கடந்த நான்கரை வருடங்கள் ஆகியும் இதனாலேயே எந்தக் குழந்தையும் பிறக்கவில்லையெனவும் கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
தாய்க்கும், தந்தைக்கும் இருந்த தேவையின் காரணமாக இந்த திருமணத்தை செய்து வைத்தனர். மைத்திரிபால சிறிசேனவை ஒருபக்கத்தாலும், ரணில் விக்ரமசிங்கவை இன்னுமொரு பக்கத்தாலும் அழைத்துவந்தனர். சிம்மாசனத்தை அமைத்தனர். அவர்களை ஏற்றினர். திருமணத்தைச் செய்து வைத்தனர். கடந்த நான்கரை வருடங்கள் ஆகியும் இதுவரை எந்தவொரு குழந்தையும் இல்லை.
சோபித்த தேரர் எழுந்து வந்தால் மட்டும், இவர்களைக் கண்டால் மீண்டும் மரணித்து விடுவார் எனவும் அவர் மேலும் கூறினார்.
0 comments:
Post a Comment