விமானக் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க – சீன வர்த்தகப் போர், எண்ணெய் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களினால் விமான நிறுவனங்களின் இலாபம் இந்த ஆண்டு குறைவடையும் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டு விமான நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிகர இலாபம் 35.5 பில்லியன் டொலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், தற்போது அது 28 பில்லியன் டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஊழியர்களுக்கான செலவு, எண்ணெய் விலை, கட்டமைப்புச் செலவு ஆகியவை அதிகரித்துள்ளமையும் இதற்கு காரணமாகச் சொல்லப்படுகின்றது.
இதன்காரணமாக விமானக் கட்டணங்கள் அதிகரிப்பதற்காக சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment