முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ”நாட்டுக்காக ஒன்றிணைவோம்” வேலைத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கம் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
அளம்பில் கமநல சேவைகள் திணைக்களத்தின் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெ.சயந்தன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
இதில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், ஜனாதிபதி செயலக அதிகாரிகள் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் உமாமகள் மணிவண்னன், முல்லைத்தீவு மாவட்ட செயலக விவசாயப் பணிப்பாளர் இ.கோகுலதாசன், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளார் எஸ்.புனிதகுமார், .கமநல அபிவிருத்தி உத்தியோகத்தார் எஸ் .சுகந்தன் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தனர் .
21 விவசாயிகளுக்கு தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களும் 05 விவசாயிகளுக்கு சூரியமின்கல நீர் இறைக்கும் இந்திரங்களும் 21 விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பைகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment