முல்லைத்தீவு - கள்ளப்பாடு, அ.த.க பாடசாலையில் விளையாட்டரங்கிற்கு நேற்றையதினம் அடிக்கல் நடப்பட்டது.
பாடசாலையின் முதல்வர் திரு. கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கலந்துகொண்டு அடிக்கல்லை நட்டு வைத்தார்.
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நடாளுமன்ற உறுப்பினர்களான. சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா 5 இலட்சம் ரூபாவும் , சாள்ஸ் நிர்மலநாதன் 5 இலட்சம் ரூபாவும் தமது விசேட நிதி ஒதுக்கீட்டிலிருந்து, விளையாட்டரங்கு அமைப்பதற்கு நிதியுதவிகளை வழங்கியுள்ளனர்.
இதில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், பாடசாலை அபிவிருத்திச்சங்கச் செயலர் திரு.வி.பகீரதன், மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment