இதுவரையில் சமுர்த்தி திட்டத்துக்குள் உள்வாங்கப்படாத அல்லது சமுர்த்தி கிடைக்கப்பெறாத மலையக மக்கள் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடு செய்து சமுர்த்தி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டத்தில் 23306 பேருக்கு சமுர்த்தி உதவி வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் பெருந்தோட்டங்களை சேர்ந்த எம்மவர்களுக்கு புறக்கணிக்கப்பட்டு வந்த சமுர்த்தி உதவி கொடுப்பனவு தற்போது வழங்கப்பட்டுள்ளது. மலையக வரலாற்றில் மிகப் பெரிய முன்னேற்றகரமான செயற்பாடாகும். சமுர்த்தி உதவி திட்ட விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி எம்மவர்களுக்கு சமுர்த்தி உதவிகள் கிடைக்க உதவி புரியவேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
புதிதாய் சிந்திப்போம் தன்னம்பிக்கையுடன் முன்னேறுவோம் என்ற தொனிப்பொருளில் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஆறு இலட்சம் பேருக்கு சமுர்த்தி உதவிகள் வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில், வெளிநாட்டு வேலைவாய்பு டிஜிட்டல் தொலைதொடர்பு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ¸ பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் உட்பட பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்தகுமார்¸ மாகாண சபை உறுப்பினர்கள்¸ உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் உறுப்பினர்கள் சமுர்த்தி பயனாளிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
0 comments:
Post a Comment