அரச அமைச்சுப் பொறுப்புகளிலிருந்து கூட்டாக விலகுவதாக அறிவித்திருந்த முஸ்லிம் உறுப்பினர்கள் இன்றும் பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவில்லை என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கு, முன்னாள் அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் நாடாளுமன்றில் வைத்து இன்று பதில் வழங்கியுள்ளார்.
விடயம் தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,
அனைத்து உறுப்பினர்களும் பதவி விலகுவதாக அறிவித்து, ஒரே கடிதத்தில் கைச்சாத்திட்டுப் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.
எனினும் அவ்வாறு இல்லாது பிரத்தியேக பதவி விலகல் கடிதங்களைத் தருமாறு கோரப்பட்டிருந்தது.
இதற்காகப் பிரத்தியேக பதவி விலகல் கடிதங்களை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாரித்திருந்தபோதும், நோன்பு பெருநாள் காரணமாக அவற்றை அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.
தற்போது அந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது - என்றார்.
இதனை உறுதி செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தற்போது சில உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதங்கள் கிடைத்திருப்பதாகவும், ஏனைய உறுப்பினர்களின் கடிதங்களும் கிடைக்கப்பெறும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment