துபாயில் நடைபெற்ற சாலை விபத்தில் இந்தியர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓமான் நாட்டு தலைநகரம் மஸ்கட்டிலிருந்து நேற்று மாலை துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் வெளிநாட்டவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
துபாய், ராஷியா என்ற பகுதியில் வந்தபோது, பேருந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஐவர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்ததுடன் மேலதிக விசாரணைகளையும் முமுன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment