முல்லைத்தீவு மாவட்டத்தில் நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தினூடாக திருமுறுகண்டி கிராம அலுவலர் பிரிவில் முதியோருக்கான ஆயுர்வேத மருத்துவ முகாம் நேற்று இடம்பெற்றுள்ளது.
திருமுறுகண்டி கிராம அலுவலர் ந.ஜெயசுதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலக உதவிச் செயலர் லலித் பண்டார ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் த.அகிலன் ஆயுள்வேத மருத்துவர் மற்றும் கிராம வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் அமைப்புகளின் உறுப்பினர்கள், வயோதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது வருகை தந்த அனைத்து வயோதிபர்களும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆயுர்வேத மருந்துகளும் வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment