ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தில் மாணவர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் ஐந்து மாணவர்கள் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
பகிடிவதைக்கு எதிர்ப்பு வெளியிட்டமைக்காக மாணவர் ஒருவர் மீது குறித்த ஐந்து மாணவர்களும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக உப வேந்தர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பல்கலைக்கழக நடவடிக்கைகள் அனைத்தும் வழமையான முறையில் இடம்பெறுவதாகவும் உபவேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment