ஒக்டோபர் மாதம் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியுடன், ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனியான அரசாங்கமொன்றை அமைக்கும் பலம் கிடைத்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, ”எமக்கு அரசாங்கம் அமைந்தாலும், எமக்கு எதிரான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
எமது முட்டாள் தனத்தினால், எமக்கு எதிரான தரப்பினரையும் நாம் இணைத்துக்கொண்டோம். இவர்கள்தான் எமக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டார்கள். அனைத்து செய்றபாடுகளின்போதும் எம்மை வீழ்த்தினார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியினரால் எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ள முடியாத நிலைமை கடந்த காலங்களில் ஏற்பட்டது.
எனினும், ஒக்டோபர் மாத அரசியல் சூழ்ச்சிக்குப் பின்னர், தற்போதைய நிலைமையில் எமக்கு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க முடியுமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனவே, அடுத்த பொதுத் தேர்தலுடன் நாம் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கமொன்றையே ஸ்தாபிப்போம் என்பதை இங்குக் கூறிக்கொள்கிறேன்” என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment