கார் மற்றும் மகேந்திரா ரக வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வவுனியா ஓமந்தை எரிபொருள் மீள்நிரப்பு நிலையத்திற்கு அருகே ஏ9 வீதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்றும் ஓமந்தையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மகேந்திரா ரக வாகனமுமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
விபத்தில் காரில் பயணித்த திருகோணமலையை சேர்ந்த மருத்துவர் படுகாயமடைந்த நிலையில் ஓமந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment