சுதந்திரபுரம் படுகொலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு



சுதந்திரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் உணர்வு பூர்வமாக இன்றையதினம் நினைவு கூரப்பட்டது.

வன்னிக்குரோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை  சுதந்திரபுரம் நிரோஜன் விளையாட்டுக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற விசேட நினைவிடத்தில்  நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.


பொதுச்சுடரை குறித்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை பறிகொடுத்த புஸ்பநாதன் இந்திராணி  தம்பதிகள்  ஏற்றி வைத்தனர்.


தொடர்ந்து ஏனையவர்களும் திரு உருவப் படத்துக்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.



நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஆண்டிஐயா புவனேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா பிரேமகாந்த் மற்றும் உறுப்பினர்கள் குறித்த தாக்குதலில் தங்களுடைய உறவுகளை பறிகொடுத்தவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


கடந்த 1998 ஆம் ஆண்டு இதே நாளில் சுதந்திரம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் விமானத் தாக்குதல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட செல் தாக்குதல்களில் 33 அப்பாவி பொது மக்கள்  படுகொலை செய்யப்பட்டனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment