தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கு எதிரான ஜனாதிபதியின் நிலைப்பாடு குறித்து நேற்று கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து முன்னெடுக்கப்பட்ட பல்வேறு முறையற்ற செயற்பாடுகளின் விளைவாகவே தற்போது இத்தகைய நெருக்கடி நிலையொன்று ஏற்பட்டிருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளின் ஊடாக வெளிப்படுத்தப்படும்போது அதனைத் தடுப்பதற்கு முயற்சிப்பதை ஏற்கமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் குறித்து சபாநாயகரே தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்கள் குறித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளின் விபரங்கள் ஊடகங்களில் பகிரங்கமாக வெளியிடப்படுவது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கூறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். எனினும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.
இவ்விசாரணைகளின்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரால் ஜனாதிபதிக்கு எதிராகப் பல்வேறு விடயங்கள் வெளிப்படத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரச அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி சிறிசேன, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடருமானால் தன்னுடனான பயணத்திலிருந்து விலகுங்கள் அல்லது தன்னை விலக்கிவிடுங்கள் என்று கடுந்தொனியில் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment