இந்தியப் பிரதமர் மோடியை, டெல்லியிலுள்ள இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த சந்திப்பின் போது பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததாகக் கூறினார்.
புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என பிரதமர் மோடியை வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதே போல் அருணாச்சல பிரதேச ஆளுநர், ஓய்வு பெற்ற பிரிக்கேடியர் பி.டி.மிஸ்ரா மற்றும் கர்நாடக மாநில ஆளுநர் வஜுபாய் வாலா ஆகியோரும் பிரதமர் மோடியை சந்தித்தனர்.
0 comments:
Post a Comment