யூடியூப் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை

ஒரு இனம் உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்பது போன்ற இனவெறி மிகுந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக வலம் வருகின்றன. 

இந்த வீடியோக்களுக்கு தடை விதிப்பதாக யூடியூப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தமது உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. 

இது குறித்து அந்த நிறுவனம் தெரிவித்திருப்பதாவது,

யூடியூப் நிறுவனம் வெறுப்புப் பேச்சுக்களுக்கு எப்போதுமே எதிரான கொள்கையைக் கொண்டது. தற்போது மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கும் ஒரு இனம் உயர்ந்தது என்பது போல் சித்தரிக்கும் வீடியோக்களை முற்றிலும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

உடனடியாக அமுலுக்கு வந்திருக்கும் இந்த நடவடிக்கையை முழுமையாக நிறைவேற்ற சில மாதங்கள் ஆகலாம். எனினும், படிப்படியாக முழுவதுமாக அமுலுக்கு வந்துவிடும். 

நியூஸிலாந்து மசூதிகளில் நடைபெற்ற இத் தாக்குதல் நேரலையாக யூடியூபில் ஒளிபரப்பானதையடுத்து, உலக தலைவர்கள் சமூக வளைத்தளங்கள் மூலம் பரவும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

இதனையடுத்து பல்வேறு சமூக வலைத்தளங்கள் தாமாக முன்வந்து இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளைக் கையாண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. என்றுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment