தமிழர்களின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை பெற வேண்டுமெனில் கல்வியை பிரதான ஆயுதமாக எடுக்கவேண்டும் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட மல்வத்தை கிராமத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “எமது தமிழ்ச்சமூகம் கடந்தகால யுத்தத்தினால் பலதரப்பட்ட இன்னல்களை சந்தித்து பொருளாதார ரீதியில் நலிவுற்றுக்கிடக்கின்றது.
தமிழர்களின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை பெற வேண்டுமெனில் கல்வியை பிரதான ஆயுதமாக எடுக்கவேண்டும்.
மாணவ மாணவியர் கல்வியில் முழு மூச்சுடன் செயற்படுவார்களாயின் சமூகத்தில் பாரிய மாற்றத்தை காணமுடியும். அதன் மூலம் இப்பிரதேசத்தில் பொருளாதரத்தை பெருக்கிகொள்ள முடியும்” என மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment