வெளிநாட்டு படைகள் நாட்டுக்குள் வருவதற்கு இடமளிக்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தான் பதவியில் இருக்கும் வரை இந்த விடயம் இடம்பெறாது என அவர் இன்று தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து வெளிநாட்டு படைகள் இலங்கைகுள் வர முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து அஸ்கிரிய, மல்வத்து மகாநாயக்கர்கள் மற்றும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் இணைந்து வெளிநாட்டு படைகளை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டாம் என நேற்று தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே இதுகுறித்து வெளியாகும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment