இன்றுடன் அமைச்சர் பதவியை இழக்கிறார் ரிசாத்?

இந்தியாவிலிரு்தபடியே,  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அமைச்சர் ரிசாத்தின் பதவி விலகல் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரி ஈடுபட்டுள்ளார்.
ரிசாட்டை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன் போது பிரதமரிடம் தெளிவு படுத்தியுள்ளார்.
அதனை முழுமையாக பிரதமரும் ஏற்றதுடன் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதியின் தொலைபேசி உரையாடலையடுத்து நேற்று  முற்பகல் அமைச்சர் ரிசாத்துடன் பிரதமர் ரணில் அலரி மாளிகையில் அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ள ரிசாத் பதியுதீன், தற்காலிகமாக பதவிவிலகுமாறு ஜனாதிபதியால் கோரப்படவுள்ளார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அடுத்த ஓரிரு நாட்களில் பதவிவிலகலாம் என கூறப்படுகிறது.
காலையில் அமைச்சர் ரிசாட்டை நேரில் அழைத்து, அமைச்சு பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதியால் கோரப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. .
இவ் விடயத்தில் சில நாட்களில் ரிசாட் பதியுதீன் பதவிவிலகும் நிலைமையேற்படுமென தெரிகிறது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment