அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சியின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் கொழும்பு மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பை சிதைத்து, நாட்டை பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் செல்லும் நடவடிக்கை உட்பட பல்வேறு விடயங்களை முன்னிருத்தி, ஆரம்பத்தில் 8 மாவட்டங்களில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கைகளில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள அரசாங்கத்தின் நடவடிக்கையினால் அதிருப்தி அடைந்துள்ள அதிகமானவர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கை மாத்தறை, இரத்தினபுரி, கண்டி, கொழும்பு, காலி ஆகிய மாவட்டங்களில் நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment