உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 22ஆவது போட்டியில் இந்திய அணி 89 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
லண்டன், மென்சஸ்டர் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 336 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 337 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 35 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.
அதன் பின்னர் பாகிஸ்தான் அணிக்கு 40 ஓவர்களில் 302 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
எனினும் பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 212 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
0 comments:
Post a Comment