டுபாய் ஆட்சியாளரின் 6-வது மனைவி பிரித்தானியாவில் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டுபாய் ஆட்சியாளரின் 6-வது மனைவியும் ஜோர்தான் அரசரின் மகளுமான இளவரசி ஹயாவே இவ்வாறு மாயமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
டுபாய் ஆட்சியாளரும் பெரும் செல்வந்தருமான ஷேக் முகமது பின் ரஷீத் மக்தூம் என்பவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளவரசி ஹயா விவாகரத்து கோரியதாக கூறப்படுகிறது.
விவாகரத்து கோரிய நிலையில் அவர் ஜேர்மனியில் தஞ்சம் கோரியதாகவும், தனது பிள்ளைகள் இருவருடன் ஜேர்மனிக்கு தப்பியதாகவும், ஜேர்மன் தூதரக அதிகாரி ஒருவரே இதற்கு உதவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத்தொடர்ந்து இளவரசி ஹயாவின் கணவரும் செல்வாக்கு மிகுந்தவருமான ரஷீத் மக்தூம் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் குறித்து விடுத்த கோரிக்கையை ஜேர்மனி நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே, இளவரசி ஹயா லண்டனுக்கு சென்றிருந்த நிலையில், அங்கு வைத்து மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment