கைது செய்யப்பட்டிருந்த அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் ஊடகப்பிரிவு அதிகாரிகள் மூவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கெதிராக பொய் பிரசாரங்கள் அச்சிடப்பட்ட 600 கடிதங்களை கண்டி பகுதிகளிலுள்ள விகாரைகளுக்கு அனுப்பவதற்கு முயற்சித்த வேளையில் கொழும்பு மத்திய அஞ்சலகத்திலிருந்து பொலிஸாரால் அவை கைப்பற்றப்பட்டிருந்தன.
இது தொடர்பில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் ஊடக அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டதுடன் குறித்த கடிதங்கள் தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை என அமைச்சர் கிரியெல்ல தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment