மாயமான விமானத்தை கண்டறிந்து தகவல் தருபவர்களுக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என விமானப்படை அறிவித்துள்ளதுகடந்த வாரம் அசாம் மாநிலம், ஜோர்காட்டிலிருந்து, அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள, மேற்கு சியாங் மாவட்டத்துக்கு, இந்திய விமானப் படையின், ஏ.என் - 32 ரக விமானம், 13 பேருடன் புறப்பட்ட, இந்திய விமானப் படை விமானம், திடீரென மாயமானது.
விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.விமானம் புறப்பட்ட அரை மணி நேரம் வரை, கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்தது.
அதற்கு பின், விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது குறித்த தகவல், விமானப் படை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. சுகோய் - 30 ரக போர் விமானம் உள்ளிட்ட, இந்திய விமானப் படை விமானங்கள் மூலம், தீவிர தேடுதல் வேட்டை துவக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாயமான விமானத்தை கண்டறிந்து தகவல் தருபவர்களுக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என விமான்ப்படை தெரிவித்துள்ளது. விமான இருப்பிடம் குறித்த தகவல் அளிப்போர் லேண்ட் லைன் மற்றும் அலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளது.
0 comments:
Post a Comment