கிளிநொச்சி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
இராணுவ வாகனம் ஒன்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி 55ம் சந்திப் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையினூடாக இராணுவ வண்டி செல்ல முற்பட்ட வேளை விபத்து இடம்பெற்றுள்ளது.
0 comments:
Post a Comment