மக்களவைத் தோ்தலைப் போன்று உள்ளுராட்சித் தோ்தலிலும் பெண் வேட்பாளா்களுக்கு 50 சதவிகிதம் வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் தொிவித்துள்ளாா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சீமான் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாம் தமிழா் கட்சிக்கு வாக்களித்தால் பா.ஜ.க வந்துவிடுமென சிலரின் பொய்யான பரப்புரையின் காரணமாகவே மக்களவைத் தோ்தலில் தங்களுக்கான வாக்கு சதவிகிதம் குறைவடைந்ததாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு எம்மால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்பதுடன் உங்களின் குரலாகவே எப்போதும் ஒலிப்போம் எனவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த மக்களவைத் தோ்தலைப் போன்று உள்ளுராட்சித் தோ்தலிலும் பெண் வேட்பாளா்களுக்கு 50 சதவிகிதம் வாய்ப்பை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment