கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் எச்.ஐ.வி தொற்றினால் நாட்டில் 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் விஷேட வைத்தியர் திருமதி.சந்திரிகா ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாட்டில் உள்ள எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3200க்கும் அதிகமாகும் என்றும் அவர் தெரிவித்தார். அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களுள் எச்.ஐ.வி தொற்று பாலியல் செயற்பாட்டுக் காரணமாக ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நோயை அடையாளம் காண்பதற்கு இரத்த பரிசோதனை மாத்திரம் போதுமானது. அதேவேளை இது தொடர்பான இரத்த பரிசோதனை இலவசமாக மேற்கொள்ள முடியும். அரசாங்க வைத்தியசாலைகளிலும் இந்த பரிசோதனை இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 20 நிமிடங்களில் அதாவது குறுகிய நேரத்திற்குள் எயிட்ஸை அடையாளம் காண்பதற்கான பரிசோதனைகள் தற்பொழுது மேற்கொள்ள முடியும் எனவும் வைத்தியர் திருமதி.சந்திரிகா ஜயக்கொடி மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment