பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லோராலாய் மாவட்டத்தில் போலீஸ் பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த கல்லூரியில் இன்று பரீட்சை நடைபெற்றது. அப்போது அங்கு வந்த தற்கொலைப்படை பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் பலியானார். மேலும், தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பயங்கரவாத தாக்குதகுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றது.
0 comments:
Post a Comment