4 மாநிலங்களவை எம்.பி.க்கள் பா.ஜ.வில் இணைந்தனர்

பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் தோல்வியை தழுவியது.
பாராளுமன்றத் தேர்தலில் 3 தொகுதிகளில் மட்டுமே தெலுங்கு தேசம் வென்றது. மாநிலத்தில் ஆட்சியை இழந்ததுடன் பாராளுமன்ற எம்.பி.க்களின் எண்ணிக்கையும் குறைந்தது.
இந்நிலையில், ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.க்கள் 4 பேர், பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் டெல்லியில் இன்று அக்கட்சியில் இணைந்தனர்.
டெல்லியில் பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா முதல் முறையாக செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அங்கு வந்த தெலுங்கு தேசம் எம்.பி.க்களான ஒய்.எஸ்.சவுத்ரி, ரமேஷ், வெங்கடேஷ் ஆகியோர் பா.ஜ.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment