பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த 33 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம், நேற்றைய தினம் இந்தியாவின், இமாச்சல் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிம்லாவிலிருந்து சவேராகாட் என்ற இடத்திற்கு சென்ற தனியர் பேருந்து ஒன்றே பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின்போது குறித்த பேருந்தில் சுமார் 78 முதல் 80 பேர் பயணித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்பட்டபோதிலும் தற்போது உயிரிழப்பு 44 ஆக உயர்வடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமைகள் கவலைக்கிடமாகவுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. அதனால் உயிரிழப்பு தொகை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment