உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில், இலங்கை அணி கலந்துகொண்ட முதலாவது போட்டியில் தோல்வியடைந்துள்ளது.
நியுசிலாந்துடன் மோதிய இலங்கை அணி 10 விக்கெட்டுக்களினால் தோல்வியடைந்துள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 29.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி எந்தவித விக்கெட் இழப்புக்களும் இன்றி 16.1 ஓவர்களில் இலகு வெற்றியைத் தனதாக்கியது.
இலங்கைக்கான அடுத்த போட்டி எதிர்வரும் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடவுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment