மூன்று வருடங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தங்களின் போராட்டத்திற்கு செவி சாய்க்காதவர்கள் பௌத்த மதகுருவின் 4 நாள் போராட்டத்திற்கு ஆதரவளிப்பது மிகவும் கவலையளிப்பதாக நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாப்புலவு மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் 828 நாட்களாக நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாப்புலவு மக்களின் ஊடக சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்கள், “கடந்த நான்கு நாட்களாக கண்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த மதகுருவிற்கு ஆதரவாக பலர் கோசமெழுப்பியிருந்தனர்.
ஆனால் 3 வருடங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எங்களின் கோரிக்கைகள் குறித்து தென்னிலங்கையில் எவரும் செவிசாய்க்கவில்லை. இது மிகவும் வேதனைக்குரிய விடயம். நாமும் மனிதர்களே. நாங்களும் இலங்கையர்களே. அவ்வாறிருக்க எமக்கு மட்டும் ஏன் இதுவரையில் தீர்வு வழங்கப்படவில்லை” என்றும் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
0 comments:
Post a Comment