3 வருடமாக பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்தேன்’: தமிழ் பெண்கள் வழக்கு தாக்கல்!

முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்குகள் பத்து அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. யஸ்மின் சூக்காவை தலைமையாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நட்டஈட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏப்ரலில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களிற்கு மேலதிகமாக எட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதில் 3 வருடமாக பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் இளம்பெண் ஒருவரும் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கருத்தடை மருந்துகள் ஏற்றப்பட்டு, இராணுவ முகாமில் பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.
இது தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்-
இலங்கையின் ஜனாதிபதியாகும் நம்பிக்கையுடன் இருக்கும் கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அமெரிக்காவில் மத்திய மாவட்டத்திற்கான மாவட்ட நீதிமன்றில் 10 புதிய நட்டஈட்டு
கோரிக்கைகளை எதிர்நோக்குகின்றார்.
26 யூனில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களில், தமது பாதுகாப்பை கருத்திற்கொண்டு தம்மை அடையாளங் காட்டாமல் இருக்கும் 10 புதிய வழக்கு தொடுநர்கள் திரு ராஜபக்ச அவர்களின் முற்றுமுழுதான கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காவல் நிலையங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் தாம் அனுபவித்த பயங்கரமாக மீறல்களை விபரிக்கின்றார்கள். அவர்கள் சூடாக்கப்பட்ட இரும்புக் கம்பிகளால் சுடப்பட்டார்கள், கேபிள்களால் அடிக்கப்பட்டார்கள், பெற்றோலில் நனைத்த பினாஸ்டிக் பைகளை அவர்களது தலைகளுக்கு மேலாக போட்டு மூச்சு
திணறடிக்கப்பட்டார்கள். அத்துடன் அவர்களில் ஆறு பேர் திரும்பத் திரும்ப பாலியல்
வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதோடு பாலியல் ரீதியாகவும் தாக்கப்பட்டார்கள்.
இந்த 10 புதிய வழக்குத் தொடுநர்களில் மூன்று பெண்களும் உள்ளடங்குகின்றனர். அத்துடன் அவர்களில் எட்டுப் பேர் தமிழர்கள். இரண்டு பேர் சிங்களவர்கள்.
நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் சர்வதேச சட்ட நிறுவனமான கோஸ்பீல்ட் உடன் இணைந்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆறு வருட கால விசாரணைகளின் விளைவாகவே இந்த வழக்கு வந்துள்ளது. ஏப்ரல் 5 இல் கனடா பிரஜையான றோய் சமதானம் என்பவரின் சார்பாக முதலில் தாக்கல் செய்யப்பட்ட முன்னைய வழக்கில் இந்த வழக்கு தொடுநர்களும் இணைந்து
கொள்கின்றனர்.
இந்த வழக்கானது அமெரிக்க நீதிமன்றங்களில் சித்திரவதையால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட நிவாரணம் வழங்கும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது . திரு ராஜபக்சாவை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறி மூன்று தனிநபர்கள் திரு சமதானத்தை நேரடியாக தொடர்பு கொண்டு அவருக்கு அச்சுறுத்தல் விடுத்தயடுத்து 29 ஏப்பிரலில் ஒரு தொந்தரவை உடன் இடைநிறுத்துவதற்கான மனு ஒன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
சகோதரர் இலங்கையினுடைய ஜனாதிபதியாக இருக்க, 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015வரை இலங்கையின் சக்திவாய்ந்த பாதுகாப்புச் செயலாளராக இருந்த திரு ராஜபக்ச, தண்டனைகளிலிருந்து விதிவிலக்குடன் திட்டமிட்ட ரீதியில் ஆட்களை கடத்தி சித்திரவதை செய்து, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி சந்தேக நபர்களிடமிருந்து பணம் பறித்த கட்டளையின் பாதுகாப்பு படைகளுக்கு பொறுப்பாக இருந்தார் என வழக்குத் தொடுநர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த துஸ்பிரயோகங்கள் நடந்த காலப் பகுதியில் ராஜபக்ச அமெரிக்க நாட்டு பிரஜையாக இருந்தார்.
தமக்கு நடந்த சித்திரவதைகளில் இலங்கையின் முக்கிய பொலிஸ் விசாரணை அதிகாரியான நிசாந்த டி சில்வா உட்பட குறிப்பிட்ட எண்ணிக்கையான பாதுகாப்பு அதிகாரிகள் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர் என வழக்குத் தொடுநர்கள் அடையாளங் காட்டுகின்றனர். உடல் முழுவதும் அடித்து, சீலிங்கில் இருந்து தலை கீழாக கட்டி தூக்கி தம்மை இரண்டு தடவைகள் சித்திரவதை செய்ததாக நிசாந்த டி சில்வாவை பாதிக்கப்பட்ட ஒருவர் குற்றஞ்சாட்டுகின்றார்.
கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியாக இருந்த பிரசன்ன டி அல்விஸ் என்பவரும் வழக்கு தொடுநர்களால் பெயர் குறிப்பிடப்படுகின்றார். இவர் சித்திரவதை செய்த உத்திரவிட்டதாகவும் சில சமயங்களில் சித்திரவதையில் பங்கெடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இவர் கோத்தபாயவிடமிருந்து நேரடியாக அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொண்டார் எனவும் சொல்லப்படுகின்றது.
“குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகள் பொலிஸ் படையில் முக்கிய விசாரணைப் பொறுப்புகளில் தொடர்ந்தும் இருப்பதானது இலங்கைக்குள் ஏன் நீதியைப் பெற்றுக் கொள்ளமுடியாமல் உள்ளது என்பதைக் காட்டுகின்றது” என ஐவுதுP இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். “வெளிநாட்டில் ஒரு வழக்கினைக் கொண்டு வருவதே அவர்களுக்குள்ள ஒரே தெரிவாகும்”.
இந்தப் புதிய முறைப்பாடானது வவுனியா ஜோசப் முகாம், தலைநகர் கொழும்பு மற்றும் புல்மோட்டையிலுள்ள பொலிஸ் நிலையங்கள் மற்றும் காலியிலுள்ள பூசா தடுப்பு நிலையம் உட்பட்ட இராணுவ முகாம்களில் 2008 ஆம் ஆண்டிற்கும் 2013 ஆம் ஆண்டிற்கும் இடையில் இடம்பெற்ற சித்திரவதைகள் பற்றிய விரிவான குற்றச்சாட்டுக்களை கொண்டுள்ளது. இந்த முறைப்பாடு மேலும் இராணுவப்புலனாய்வு, குற்ற விசாரணைத் திணைக்களம், பயங்கரவாத
விசாரணைப் பிரிவு மற்றும் விசேட புலனாய்வு சேவை உட்பட பொறுப்புவாய்ந்த பல்வேறு அரசாங்க முகவர் அமைப்புக்களையும் அடையாளங் காட்டுகின்றது.
வித்தியா ஜெயக்குமார் என்ற புனைபெயரின் கீழ் ராஜபக்ச மீது வழக்குத் தொடரும் ஒரு தமிழ் வழக்குதொடுநர் 2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் இராணுவ முகாம்களில் தான் 3 ஆண்டுகளாக பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாக குற்றஞ்சாட்டுகின்றார். முதல்நாள் இரவு பெண் சிங்கள இராணுவத்தினர் தமது கட்டளையதிகாரியான மேஜர் முனதுங்க மிருகனத்தனமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்வதற்கு அவரை கட்டிலுடன் கட்டினார்கள். இவர் பின்னர் ஒரு இராணுவ முகாமில் இளம் தமிழ்ப் பெண்கள் குழுவினருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் அங்கு ஒவ்வொருநாள் இரவும் கடமை முடித்து விட்டிருக்கும்
இராணுவத்தினர் பாலியல் வன்புணர்வு செய்வதற்கு வந்து ஒரு பெண்ணை தெரிவு செய்வார்கள்.
இவர் பின்னர் ஒரு பொலிஸ் தலைமையகத்தில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானார். அத்துடன் இன்னுமொரு இராணுவ முகாமில் மீண்டும் மீண்டும் பாலியல் வன்புணர்வுக்குள்ளானார். அவரைப் பிடித்து வைத்திருந்தவர்கள் கர்ப்பமாவதைத் தடுப்பதற்காக இவருக்கும் ஏனைய பெண்களுக்கும் கருத்தடை ஊசிகளை பல்வேறு இடங்களில் வைத்து போட்டார்கள்.
“உண்மையாக, நான் சந்தித்தவற்றில் பாலியல் அடிமைத்தனம் பற்றிய மோசமான சம்பவம் இதுவாகும்” என இந்த வழக்கினை தாக்கல் செய்த கோஸ்பீல்ட் நிறுவனத்தின் மனித உரிமைகள் வழக்கறிஞர் ஸ்கொட் கில்மோர் தெரிவித்தார். எமது கட்சிக்காரர்களுக்கு எதிராக கோத்தபாயவின் பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட பாலியல் வன்முறைகளும் அத்துடன் குற்றமிழைத்தவர்களை ஒட்டுமொத்தமாக தண்டனைகளிலிருந்து பாதுகாப்பதும் பாலியல்
வன்புணர்வு என்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட கொள்கையின் பகுதியாக இலங்கையில்
இருந்துள்ளது என்பதைக் காட்டுகின்றது”.
“இந்த வழக்கிற்கு முன்வந்த றோய் இனதும் மற்றும் ஆண்கள் பெண்கள் என புதிய பத்து வழக்குத்தொடுநர்களினதும் மிகப் பெரிய துணிச்சலுக்கு நான் மரியாதை செய்ய விரும்புகின்றேன்” என கோஸ்பீல்ட் இன் தலைவர் மிச்சேல் கோஸ்பீல்ட் தெரிவித்தார்.
“இந்த அதிர்ச்சியான அனுபவங்களை மீளநினைவுபடுத்தி எங்களுடைய வழக்கறிஞர்களுக்கு சொல்லுதல் என்பது இதில் பங்பெடுத்த எல்லோருக்கும் மிகவும் கடினமானதாக இருந்தது அத்துடன் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையுடன் அவர்கள் இப்பொழுது நடத்தப்படுவார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களுக்கு கொஞ்சமாவது நீதி கிடைப்பதற்கும் நாங்கள் எங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம்”
வழக்கு தொடுநர்கள் பற்றி சுருக்கம்
• றோய் சமதானம் – ஒரு கனேடியத் தமிழர் இலங்கைக்கு விஜயம் செய்த போது
கைது செய்யப்பட்டார். சமதானம் பைப்புகள், துப்பாக்கியின் பின்புறம்
போன்றவற்றால் அடிக்ககப்பட்டதுடன் அவரது மனைவி பிள்ளைகள் பாலியல்
வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்படுவார்கள் என்ற அச்சுறுத்தலின் கீழ்
பலவந்தமாக ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது.
• றமேஸ் தேவராஜன் (புனைபெயர்) – ஒரு தமிழ் மனித உரிமைகள் செயற்பாட்டாளர், தேவராஜன் பெற்றோலில் நனைக்கப்பட்ட ஒரு பொலித்தீன் பையினால்
மூச்சுத்திணறச் செய்யட்டதுடன் ,சீலிங்கில் இருந்து தலைகீழாக கட்டித்
தொங்கவிடப்பட்டதுடன் பொலிசாரால் அவரது குதிக்கால்களில் இரும்புக் கம்பியால்
அடிக்கப்பட்டார்.
• சாந்தி பத்மநாதன் (புனைபெயர்) – அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த
ஒரு இளம் தமிழ்ப் பெண், பத்மநாதன் கடத்தப்பட்டு பொலிசாரால்
விசாரிக்கப்பட்டதுடன் மீண்டும் மீண்டும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு
அடிக்கப்பட்டு சிகரெட்டால் சுடப்பட்டதுடன் மிகவும் சூடான உலோக கம்பியினாலும்
சுடப்பட்டார்.
• நிமல் ஜெயசூரியா (புனைபெயர்) – ஒரு சிங்கள மனித உரிமைகள் செயற்பாட்டாளர், ஜெயசூரியா பொலிசாரால் அடிக்கப்பட்டதுடன் தமிழ்க் கைதிகள்
சித்திரவதைக்குள்ளாவதைப் பார்ப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார், அவருடைய
சகபணியாளர்களை கண்டிக்குமாறு அவருக்கு அழுத்தங்கொடுக்கவே இவையாவும்
இடம்பெற்றது.
• வித்தியா ஜெயக்குமார் (புனைபெயர்) – சிவில் சேவையாளராக LTTE இன்
அரசாங்கத்தில் இருந்த ஒரு இளம் தமிழர். இவர் இராணுவத்திடம் சரணடைந்தார்,
ஜெயக்குமார் ஒரு இராணுவமுகாமிலும் பொலிஸ் நிலையங்களிலும் வெளித்
தொடர்புகள் எதுவும் இல்லாமல் வைக்கப்பட்டிருந்தார் அத்துடன் பிடிக்கப்பட்ட
மற்றைய தமிழ்ப் பெண்களுடன் மூன்று வருடத்திற்கு மேலாக பாலியல்
துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதை போன்றவற்றை அனுபவிக்க
நிர்ப்பந்திக்கப்பட்டார்.
• சமன் பெரேரா (புனைபெயர்) – பாதுகாப்பு படைகளில் உறுப்பினராக இருந்த ஒரு
சிங்களவர் , அவர் LTTE யினருக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டார்,
பெரேராவிக்கு மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை முள்ளுக் கம்பியைக் கொண்ட ஒரு
ஊலோகப் பைப்பை அவரது மலவாசலுக்குள் புகுத்தலை உள்ளடக்கியிருந்தது.
• றமணன் சிவலிங்கம் (புனைபெயர்) – LTTE இனை ஆதரித்தமைக்காக கைது
செய்யப்பட்ட ஒரு தமிழ் மாணவன். சிவலிங்கம் திரும்ப திரும்ப சூடான
உலோகத்தால் சுடப்பட்டடன் பொற்றோலால் மூச்சுத் திணறச் செய்யப்பட்டார்
அத்துடன் மிகவும் குளிரான கம்பியால் மலவாசல் வழியாக வன்புணர்வுக்கு
உட்படுத்தப்பட்டார்.
• சுரேஸ் ஜெயபாலன் (புனைபெயர்) – ஒரு தமிழ் LTTE உறுப்பினர், மனித
உரிமைகள் மீறல்களை ஆவணப்படுத்தும் ஒரு தொண்டு நிறுவனத்தில்
பணியாற்றினார். ஜெயபாலன் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு
விசாரிக்கப்பட்டார். அவர்கள் அவரை சிகரெட்டினால் சுட்டதுடன் பெற்றோலில்
நனைக்கப்பட்ட பையால் மூச்சுத் திணறச் செயதார்கள். அத.துடன் அவர் மல வாசல்
வழியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்.
• மயூரன் ராஜ்குமார் (புனைபெயர்) – ஒரு தமிழ் அரசாங்கப் பாடசாலை ஆசிரியர்,
LTTE இனருக்கு உதவி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார், தடுப்பு முகாம் ஒன்றில்
வைக்கப்பட்டதுடன் , அடிக்கப்பட்டதுடன், சிகரெட்டுக்களால் சுடப்பட்டு, சூடாக்கிய
கம்பியினாலும் சூடு வைக்கப்பட்டார்.
• செந்தில் புவனேஸ்வரன் (புனைபெயர்) – யுகேயில் இருந்த ஒரு தமிழ்ப் பட்டதாரி
மாணவன் , புவனேஸ்வரன் வீட்டுக்குச் சென்றபோது பொலிசாரால் கடத்திச்
செல்லப்பட்டு தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டு அங்கு வைத்து அடிக்கப்பட்டு ,
அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதற்கு சம்மதிக்கும் வரைக்கும் அவருடைய
தோல் உரியும் வரையும் சூடாக்கிய எலோகத்தால் திரும்ப திரும்ப சுடப்பட்டார்.
• வசந்தி ரட்ணசிங்கம் (புனைபெயர்) – LTTE அரசாங்கத்தின் நிதிப் பிரிவில்
பணியாற்றிய ஒரு இளம் தமிழ்ப் பெண், ரட்ணசிங்கம் போர் வலயத்தை விட்டுத்
தப்பியோடும் போது பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு அவரை
விசாரணை செய்தவர்களால் மரத்தடியால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டார்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment