இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 24-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பேர்ஸ்டோவ், ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் உடன் பந்து வீச்சை தொடங்கியது ஆப்கானிஸ்தான். முதலில் இங்கிலாந்து அணி நிதானமாக விளையாடியது. வின்ஸ் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து பேர்ஸ்டோவ் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. பேர்ஸ்டோவ் 99 பந்தில் 90 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அப்போது இங்கிலாந்து 29.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்திருந்தது.3-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் கேப்டன் மோர்கன் ஜோடி சேர்ந்தார்.
மோர்கன் தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இங்கிலாந்தின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 36 பந்தில் அரைசதம் அடித்த மோர்கன், 57 பந்தில் சதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய ஜோ ரூட் 54 பந்தில் அரைசதம் அடித்து சதத்தை நோக்கிச் சென்றார்.இருவருடைய ஆட்டத்தை வைத்து பார்க்கும்போது இங்கிலாந்தின் ஸ்கோர் 400 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 47-வது ஓவரில் இருவரும் ஆட்டமிழந்தனர். ஜோ ரூட் 82 பந்தில் 88 ரன்களும், மோர்கன் 71 பந்தில் 4 பவுண்டரி, 17 சிக்சருடன் 148 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.மோர்கன் ஆட்டமிழக்கும்போது இங்கிலாந்து 47 ஓவரில் 359 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் தலா 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். மொயீன் அலி 9 பந்தில் 31 ரன்கள் விளாச இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்துள்ளது.
0 comments:
Post a Comment