பீகாரில் கடுமையான வெயிலுக்கு ஒரே நாளில் 30 பேர் பலி

தென்மேற்கு பருவ மழை தொடங்கி பல மாநிலங்களில் மழை பெய்து வரும் நிலையிலும் நாட்டின் பல மாநிலங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. வட மாநிலங்களில் கடுமையான வெயில் தாக்கம் உள்ளது.

இந்நிலையில், பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் கடுமையான வெயிலுக்கு நேற்று ஒரே நாளில் 30 பேர் பலியானார்கள்.

இதுதொடர்பாக, சதார் மருத்துவமனை டாக்டர் சுரேந்திரகுமார் சிங் கூறுகையில், வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட 30 பேர் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 

மேலும் 10 பேர் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் மயக்கமாகவும், சிலர் மனநிலை தடுமாற்றத்துடனும் உள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், வெயிலுக்கு பலியானோர் குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment