எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவதனை தவிர்க்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றயீட்ட வேண்டுமாயின் 65 இலட்சம் வாக்குகள் பெற்றுக்கொள்ள வேண்டும். சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து கொண்டால் மட்டுமே இவ்வாறு 65 லட்சம் வாக்குகள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவையும் களமிறக்கப்பட வேண்டுமெனத் தாம் கோரிக்கை முன்வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், “கோதபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டால் மஹிந்த பிரதமர், பெசில் அமைச்சர், சமால் அமைச்சர், நாமலுக்கும் ஒர் அமைச்சுப் பதவி கட்டாயம் கொடுக்க வேண்டும், ஷசீந்திர ராஜபக்ஷ மற்றும் நிரூபமா ராஜபக்ஷ ஆகியோருக்கும் அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டும்.” அப்படியென்றால் 30 பேரைக் கொண்ட அமைச்சரவையில் எட்டு பேர் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
0 comments:
Post a Comment