நடைபெற்றுவரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 33ஆவது போட்டியில் நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
பேர்மிங்கமிலுள்ள எட்ஜ்பஸ்ரன் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் நியூஸிலாந்து அணி 238 ஓட்டங்களை பாகிஸ்தான் அணியின் வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது.
இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த நிலையில் அணி தடுமாறியது.
இதனால் விரைவாக 5 விக்கெட்டுகளை இழந்த நியூஸிலாந்து அணிக்கு ஜேம்ஸ் நீஷாம் மற்றும் கொலின் டி கிரந்தம் ஆகியோரின் இணைப்பாட்டம் கைகொடுத்தது.
இந்நிலையில் நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 237 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அணிசார்பாக, ஜேம்ஸ் நீஷாம் ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அத்துடன் கொலின் டி கிரந்தம் 64 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 41 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். ஏனைய வீரர்கள் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
பந்து வீச்சில் மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் அணியின் ஷஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அத்துடன் மொஹம்மட் அமிர் மற்றும் ஷதாப் ஹான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி 238 ஓட்டங்களை நோக்கித் துடுப்பெடுத்தாடவுள்ளது.
0 comments:
Post a Comment