2020 இலும் ஜனாதிபதி யார்?

கடந்த 2005 ஆம் ஆண்டும் 2010 ஆம் ஆண்டும் 2015 ஆம் ஆண்டும் இந்த நாட்டில் ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானித்தது ஜாதிக ஹெல உறுமய எனவும் 2020 ஆம் ஆண்டிலும் தாமே அதனைத் தீர்மானிப்பதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் நேற்று நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.
கடந்த காலத்தில் ஜனாதிபதியின் கொள்ளைத் திட்டம் என்ன என்பதை நாமே தீர்மானித்தோம் எனவும், இம்முறையும் தாமே அதனை தீர்மானிப்போம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தை ஒத்திவைத்து வருவது நாட்டின் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment