நாட்டில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காக சுமார் 20 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கப்படவுள்ளது.
இத் தகவலை இழப்பீட்டிற்கான அலுவலகத்தின் பணிப்பாளர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த 174 பேரின் குடும்பங்களுக்காகவும் காயமடைந்த 248 பேருக்கும் குறித்த நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாதிக்கப்பட்ட தேவாலயங்களை புனரமைப்பதற்காக 25 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாகவும் இழப்பீட்டிற்கான அலுவலகத்தின் பணிப்பாளர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment