கம்போடியாவில் இடம்பெற்ற கட்டட விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
கம்போடியாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள பிரபல சூதாட்ட நகரமான சிஹானோக்வில்லி பகுதியில் சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் 7 மாடிகளை கொண்ட புதிய கட்டடத்தை உருவாக்கி வருகிறது.
இதன்போது திடீரென்று ஒட்டுமொத்த கட்டடமும் சில நொடிகளில் நொறுங்கி விழுந்து தரைமட்டமானது. இடிபாடுகளுக்குள் சிக்கிய சுமார் 50 தொழிலாளர்களை மீட்க தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர்.
இதன்போது 20 இற்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், 15 பேரின் சடலங்கள் இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
0 comments:
Post a Comment