சவுதி அரசாங்கம் வருடா வருடம் இலங்கை நாட்டுக்கு வழங்கி வரும் 150 மெற்றிக் டொன் பேரீத்தம் பழங்கள் சம்பிரதாய பூர்வாமாகக் கையளிக்கும் நிகழ்வு கொழும்பில் கொழும்பில் உள்ள சவுதி அரேபியா நாட்டின் தூதுவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சவூதி அரேபியாவின் தூதுவர் அப்துல் நஸாா் பின் அல் ஹர்தி, தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளா் திருமதி எம்.எஸ் முகம்மதிடம் பேரீத்தம் பழங்களை அலுவலக ரீதியாக கையளித்தாா்.
கடந்த 2 மாதகாலமாக நாட்டின் நடைபெற்ற அமைதியின்மை காரமாண இந் நிகழ்வு பிற்போடப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் அமைச்சின் மேலதிகச் செயலாளா் எம். முகைஸ் ,முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளா் எம்.ஆர்.எம் மலிக் மற்றும் சவுதி அரசா் சல்மான் மணிதபிமான உதவித்திட்டத்தின் நிதிப் பணிப்பாளா் மகுமூத் குரைசி ஆகியோரும் கலந்து கொண்டனா்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment