மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. நீர்நிலைகள் வற்றி விட்டதால் நீராதாரம் இன்றி வன விலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தேவாஸ் மாவட்டம் பஞ்சபுரா வனப்பகுதிக்கு உட்பட்ட ஜோஷி பாபா பகுதியில் 15 குரங்குகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ததில், கடுமையான வெப்பம் காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்தது தெரியவந்தது.
ஆனால், அந்த குரங்குகள் இறந்து கிடந்த இடத்தில் இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில்தான் காளி சிந்து நதியின் கிளை நதி உள்ளது. அந்த நதியும் பல இடங்களில் தண்ணீர் இன்றி காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியிருந்தது. ஆற்றங்கரையில் பெரிய மற்றும் வலுவான குரங்குகள் திரண்டிருந்தன. எனவே, இந்த குரங்குகள், தண்ணீர் குடிக்க வந்த குரங்குகளை விரட்டியடித்ததால், அவை உடல் சூடு அதிகரித்து இறந்திருக்கலாம் என தெரிகிறது.
“ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்த குரங்குகளை, பெரிய குரங்குகள் ஒன்றுசேர்ந்து விரட்டியடித்ததை பார்த்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே, ஆற்றில் தண்ணீர் குடிக்க விடாமல் விரட்டியதால், குரங்குகள் இறந்திருக்கலாம்” என வனத்துறை அதிகாரி மிஷ்ரா தெரிவித்தார்.
0 comments:
Post a Comment