ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் மினி பஸ் ஒன்றில் இன்று சென்று கொண்டிருந்தனர்.
சோபியான் மாவட்டம் அருகில் வந்த போது மினி பஸ் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, அந்த மினி பஸ் அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது.
இந்த விபத்தில் மினி பஸ்சில் பயணம் செய்த 9 மாணவிகள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
0 comments:
Post a Comment