பயணித்துக்கொண்டிருந்த பேருந்தின் தடுப்பு செயலிழந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் ஜார்க்கண்டில் இன்று காலை நடந்துள்ளது.
ஹசாரிபக்கில் தனுவா காட்டி என்ற இடத்துக்கு அருகே இன்று காலை வழக்கம் போல பயணிகளை ஏற்றிக்கொண்டு குறித்த தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென பேருந்தின் தடுப்பு செயலிழக்க கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த வாகனத்துடன் மோதி நின்றது.
இந்தக் கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த 25 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்துக்குள்ளான பேருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின் போக்குவரத்து சீரானது.
0 comments:
Post a Comment