நகராட்சி ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த துயரச் சம்பவம் அமெரிக்காவின் வெர்ஜினிய மாகாணத்தில் உள்ள முக்கிய நகரமான வெர்ஜினியா பீச்சில் நடந்துள்ளது.
குறித்த பகுதியிலுள்ள நகராட்சி மையத்தைப் பார்வையிட ஏராளமானோர் வந்திருந்தனர். உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியளவில் அங்கு வந்த நபர் ஒருவர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் பொதுமக்களை நோக்கி சரமாரியாகச் சுட்டார்.
துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து அங்கு வந்த பொலிஸார் நடத்திய விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அப்பகுதியைச் சேர்ந்த நகராட்சி ஊழியர் என்பதும், பல ஆண்டுகளாக அவர் பணியில் இருப்பதும் தெரியவந்தது.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் தப்பிச் செல்ல முயன்ற அந்தப் பணியாளர் பொலிஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
0 comments:
Post a Comment