விசுவமடுவில் கசிப்புடன் 10 பேர் கைது

நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் விசுவமடு மாணிக்கபுரம் கிராமம் போதைதடுப்பு தொடர்பிலான  சுற்றிவைளப்பு   நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 19.6 லீற்றர் கசிப்புடன்  10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கிராம அலுவலகர், ஜனாதிபதி செயலக போதை ஒழிப்பு பிரிவினர்,பொலிஸார்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து  இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர்.  

இதேவேளை மாணிக்கபுரம் பகுதியில் போதை ஒழிப்புக்கு எதிரான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் இதற்கு முன்னைய நாள்களில் சிவில் பாதுகாப்பு குழுவினால் பொலிஸார் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற ஜனாதிபதியின் கருத்திட்டத்தின் கீழ் போதையற்ற நாடு என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக குறித்த கிராமத்தில் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போதே, நான்கு வீகளில் சட்டவிரோத கசிப்பு இனம் காணப்பட்டதையடுத்து அ  10 பேர் கைதுசெய்யப்பட்டனர். மேலதிக விசாரணைகளைத் தாம் முன்னெடுத்து, வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment